ஜோலார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தலைமையாசிரியர் டார்ச்சர் - ஆபாச வார்த்தைகளால் தொடர்ந்து வசை பாடுவதால் 11 மாணவிகள் மாற்று சான்றிதழ் வாங்கி சென்றதால் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 October 2023

ஜோலார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தலைமையாசிரியர் டார்ச்சர் - ஆபாச வார்த்தைகளால் தொடர்ந்து வசை பாடுவதால் 11 மாணவிகள் மாற்று சான்றிதழ் வாங்கி சென்றதால் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில்  மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது, இந்த பள்ளியில் சுமார் 400  க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக திருமதி சாந்தி பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது பதினொன்றாம்  வகுப்பு மாணவி ரோஷ்ணி (16) இவரை தலைமையாசிரியர் சாந்தி ஆபாச வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.  


இதனால் மணமடைந்த மாணவி விஷ மருந்த முயன்ற அப்போதே அவரது பெற்றோர்கள் அதை தடுத்துள்ளனர். தலைமையாசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர் ஆபாச வார்த்தைகளால் வசப்படுவதால் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் மாற்றுச் சான்றிதழ் வாங்கி சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/