திருப்பத்தூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 October 2023

திருப்பத்தூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்.


ஜோலார்பேட்டை ஸ்ரீராஜராஜேஸ்வரி மஹாலில் நேற்று திமுக மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருப்பத்தூர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.

இக்கூட்டத்தில் திமுகவின் அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாநில செயலாளர் டி.செங்குட்டுவன், சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் இ.ஜி.சுகவனம், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி,  ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், மு.மாவட்ட பொறுப்பாளர் ம.முத்தமிழ்ச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆ.சம்பத்குமார், சாந்திசீனிவாசன், மாவட்டப் பொருளாளர் கே.பி.ஆர்.ஜோதிராஜன், திருப்பத்தூர் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், மாநில தொண்டரணி து.அமைப்பாளர் பி.எம்.முனிவேல், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் எம்.ஆர்.ஆறுமுகம், வி.எஸ்.சாரதிகுமார், ம.அன்பழகன், ப.ச.சுரேஷ்குமார், க.உமாகன்ரங்கம், கே.சதிஷ்குமார், கே.ஆர்.திருப்பதி, எஸ்.தாமோதிரன், கே.முருகேசன், கே.ஏ.குணசேகரன், கவிதாதண்டபாணி, டி.சாமுடி, டி.அசோக்குமார், அ.மோகன்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கு.ராஜமாணிக்கம், சி.சத்தியமூர்த்தி, மு.அசோகன், சாமுவேல் செல்லப்பாண்டியன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/