திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்தில் பாமக நிர்வாகிகள் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 500 மரச்செடிகள் வழங்கும் நிகழ்வு மற்றும் 1000 பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் முதல் நிகழ்வாக குனிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 300 மரச்செடிகளும் மற்றும் சின்னகசிநாயக்கன்பட்டி நடுநிலைப் பள்ளியில் 200 செடிகளும் சின்னகசிநாயக்கன்பட்டி ஏரிக்கரையின் மேல் பகுதியில் ஆயிரம் பனை விதைகளும் நடவு செய்யப்பட்டது.
இதில் மாவட்டத் துணைத் தலைவர் PR பெரியசாமி மற்றும் கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் மற்றும் கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ். மற்றும் வன்னியர் சங்க ஒன்றிய தலைவர் பாலாஜி சிவம், பாமக அமைப்பு செயலாளர் திருப்பதி, மாவட்ட ஊடக தலைவர் ராஜா. கந்திலி ஒன்றிய ஊடக செயலாளர் மோ.அண்ணாமலை. மற்றும் முத்து, அரவிந்த், பசுமை தாயாக நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமான பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்நிகழ்வில் விமர்சையாக நடைபெற்றது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment