ஜோலார்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 1982 -ம் ஆண்டு பயின்ற பழைய மாணவர்கள்- ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அனைவரும் நினைவு பரிசு வழங்கி உற்சாகம் - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 October 2023

ஜோலார்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 1982 -ம் ஆண்டு பயின்ற பழைய மாணவர்கள்- ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அனைவரும் நினைவு பரிசு வழங்கி உற்சாகம்


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இடையாம்பட்டி உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்  1982 - ம் ஆண்டு 12ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தப் பள்ளியில் மொத்தம் 30 மாணவ, மாணவிகள் பயின்றனர். இந்த பள்ளியில் பயின்றவர்கள் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் பனியாற்றி வருகின்றனர். குறிப்பாக  இந்தியன் ரயில்வே அக்கவுண்ட் சர்வீஸ்,  டெப்டி பைனான்சியல் அட்வைசர் மற்றும் சீப் அக்கன்ட் ஆபிசர் நாகராஜன். மற்றும் விவேகானந்தன் லோகோ பைலட் (ஓய்வு) மு. சாமுண்டீஸ்வர், உதவி ஆணையர், (மாநில வரிகள்) கிருஷ்ணகிரி, ஆகியோர் தற்போதும் பணியாற்றி வருகின்றனர்.  அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி உற்சாகம் அடைந்தனர். 


இந்த பழைய மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி 41 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் சேர்ந்து ஆதரவற்ற இல்லங்களுக்கு உணவு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக போலந்து நாட்டில் இருந்து முனிசாமி என்பவர் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாங்கள் பயின்ற 7 ஆசியர்களுக்கு பதக்கம் அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/