ஆதியூர் பகுதியில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு மாரத்தான் மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம். மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.‌ - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 October 2023

ஆதியூர் பகுதியில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு மாரத்தான் மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம். மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.‌


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று திருப்பத்தூர் மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார். 

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டனர் இதில் மாவட்ட வன அலுவலர் கலாநிதி, திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் இளங்கோ, வனவர்கள் சுரேஷ், குமார், சோமசுந்தரம் மற்றும் வனத்துறை அதிகாரிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/