இந்த கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட தலைவராக பிரபு என்பவர் இருந்து வருகிறார். அவர் நிர்வாகிகளிடம் எந்த ஆலோசனையும் பெறாமல் தன்னிச்சியாக செயல்படுகிறார் என்றும் அதனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் பலவீனமாக உள்ளது. ஆகவே காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவரை நீக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதே போல் திருப்பத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் பரத் என்பவரை மாநில தலைவர் ஒப்புதல் இல்லாமால் மாவட்ட தலைவர் பிரபு தன்னிச்சையாக பொறுப்பு வழங்கி உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து அவ பெயரை ஏற்படுத்தி வரும் பரத்தை கட்சி பொறுப்பையும், கட்சியை விட்டும் நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிகழ்வில் கட்டிட கமிட்டி தலைவர் ஜெகன்நாதன், நத்தி, மற்றும் நிர்வாகிகள், ஜோலார்பேட்டை நகர தலைவர் ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment