திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட நத்தம் ஊராட்சி ஊராட்சி பெருமாள் கோயில் அருகில் வேளாண்மை துறை சார்பில் சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் மற்றும் செட் (Shed) அமைக்கும் பணிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் கே ஏ குணசேகரன், சி கே சுப்பிரமணி, திருமதி திருமுருகன், ஜி மோகன்குமார், ஆர் குமார், சக்கரவர்த்தி, சசி, நத்தம் அன்பு, பாலு, ராஜேந்திரன், ராஜா, பஷீர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment