திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட தோரணம்பதி ஊராட்சியில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மலைச்செடி தொகுப்பு மற்றும் இடுப்பு பொருட்கள் தென்னங்கன்று உயிர் உரங்கள், தெளிப்பான்கள் வழங்கும் விழா திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 307 பயனாளிகளுக்கு மலைபயிர் தொகுப்பு, சொட்டுநீர் பாசனம் மற்றும் உயிர் உரங்கள் தெளிப்பான்கள் ஆகியவற்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு சார்பில் வேளாண் இணை இயக்குனர் தீபா, தோட்டக்கலை உதவி இயக்குனர் கயல்விழி, தோட்டக்கலை அலுவலர்கள் அறிவழகன், சுபாஷ், ஹேமா, மேலும் கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் கே ஏ குணசேகரன், ஒன்றிய குழு உறுப்பினர் தாமோதரன், ஊராட்சி மன்ற தலைவர் நித்தியானந்தம், மாவட்ட பிரதிநிதி சசி மற்றும் பாலு, பச்சமுத்து, உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment