பெரியகரம் பகுதியில் வெளி மாநில பதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது! கார் மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான 30 மது பாக்ஸ்கள் பறிமுதல்! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 13 October 2023

பெரியகரம் பகுதியில் வெளி மாநில பதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது! கார் மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான 30 மது பாக்ஸ்கள் பறிமுதல்!


கர்நாடகாவில் இருந்து மதுபானம் காரில் கடத்தப்படுவதாக திருப்பத்தூர் டிஎஸ்.பி தனி படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 

அதன் அடிப்படையில்  திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பெரியகரம் பகுதியில்  தனிப்பட்ட ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி பரிசோதனை செய்ததில் கர்நாடக மாநில மது பாட்டில்கள் 30 பாக்ஸ் இருந்தது தெரிய வந்தது, மேலும் இதனை கடத்தி வந்த பேராம்பட்டு பகுதியை சேர்ந்த ‌ சிவலிங்கம் மகன் ராம்குமார் (30) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சரவணன் (28) ஆகிய இருவரையும் பிடித்து தனிப்படையினர் கந்திலி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


மேலும் இவர்கள் வெளிமாநில பதுபாட்டில்கள் கடத்த பயன்படுத்திய காரையும் 30 பாக்ஸ் அளவிலான மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


மேலும்கந்திலி ஆய்வாளர் சுரேஷ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/