இந்த நிலையில்
இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து இன்று சிலம்பரசன் வாத்து வளர்த்து வருகிறார் அவருடைய வாத்து இன்று வெங்கடேசனின் வீட்டின் அருகே வந்துள்ளது. அதனைப் பிடிக்கச் சென்ற சிலம்பரசனை கஞ்சா போதையில் இருந்த வெங்கடேசன் செடிக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சர மாறியாக வெட்டியுள்ளார்.
இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். மேலும் அளவுக்கு அதிகமான கஞ்சா போதையில் இருந்த வெங்கடேசன் அங்கிருந்து அருகே உள்ள மாந்தோப்புக்கு தப்பி சென்றுள்ளார் அப்போது மாந்தோப்பில் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் இருந்துள்ளனர் அவர்களையும் கத்தியை காட்டி வெட்டி விடுவதாக மிரட்டியுள்ளார் இதன் காரணமாக அந்த மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடிள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் கிராமிய போலீசருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார் சிலம்பரசனின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வெங்கடேசனை கைது செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். ஏகே மோட்டூர் பகுதியில் வாலிபரை கஞ்சா போதையில் முதியவர் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
.jpg)
No comments:
Post a Comment