நாகப்பாவை கடத்தியவருக்கு நயன்தாராவை கடத்த தெரியாதா? - சீமான் கேள்வி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 13 October 2023

நாகப்பாவை கடத்தியவருக்கு நயன்தாராவை கடத்த தெரியாதா? - சீமான் கேள்வி.


நாகப்பாவை கடத்தியவருக்கு நயன்தாராவை கடத்த தெரியாதா? தமிழரின் மாண்பு  குறையாமல் வாழ்ந்தவர் வீரப்பன் அவர் இருக்கும்போது காடு வளமாக இருந்தது! வீரப்பன் இருந்திருந்தால் காவேரி பிரச்சனை வந்திருக்குமா? ஒரே மாவு வட்டமா சுட்ட தோசை குண்டாவில் ஊத்தினால் இட்லி! வருமானத்துறை சரியில்லை என்று அமலாக்கத்துறை எதற்கு என சீமான் பேட்டி.



திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராமகபேட்டையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட திருப்பத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் பேசுகையில், வருமானத்துறை சரி இல்லை என்று அமலாக்கத்துறை வருகிறது CBI சரி இல்லை என்று NIA வேலை செய்கிறது எது சரியாக இருக்குமோ அதை வைத்து கொள்ள வேண்டியதுதானே?
 

ஒரே மாவு தான் வட்டமா சுட்ட தோசை குண்டாவில் ஊத்தி வைத்தால் இட்லி இதை பற்றி பேசி ஒன்றும் பயன் இல்லை, மேலும் வீரப்பன் இருக்கும்போது காடு வளாகமாக இருந்தது அவர் இருந்ததால் காவேரி பிரச்சனை வந்து இருக்காது சந்தன மரத்தை வெட்டினார், யானையை கொன்று தந்தத்தை விற்றார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனர் ஆனால் அதனை வாங்கியவர்கள் வெளியில் தானே இருந்தனர் அவர்களை என்ன செய்ய முடிந்தது.


நாகப்பவை கடத்தியவருக்கு நயன்தாராவை கடத்த தெரியாதா? வீரப்பன் தமிழரின் மாண்பு குறையாமல் வாழ்ந்தவர் எந்த ஒரு தீய பழக்கங்கள் இல்லாமல் காட்டில் வாழ்ந்தவர் அவர் இருந்திருந்தால் காவேரி பிரச்சனை வந்திருக்குமா? அவர் இருக்கும் போது அவர் காட்டிற்குள் யாவராலும் செல்ல முடியவில்லை.


அவர் மீது பழி சுமத்தி வெளியே வந்தால் பல பேர் மாட்டி கொள்வார்கள் என நினைத்து வீரப்பனை கொன்றனர். காட்டு வள பாதுகாப்பு என ஒரு குழு உள்ளது அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்று இதுவரை தெரியவில்லை என ஆதங்கம் தெரிவித்தார்.


உடன் இந்த நிகழ்வின் போது திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ராஜா தேசிங்கு, ஜோலார்பேட்டை தொகுதி செயலாளர் ரவீந்திரன், மாநில பொறுப்பாளர் பிரதீப் மகளிர் பாசறை சார்பாக சுமதி அன்பழகன், மாவட்ட, நகர,ஒன்றிய, நகர, பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/