பழுதாகி நீண்ட நாட்களாக அமைக்கப்படாத சாலை! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 October 2023

பழுதாகி நீண்ட நாட்களாக அமைக்கப்படாத சாலை!


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆண்டிப்பனூர் ஊராட்சியில் நீண்ட நாட்களாக பழுதாகி இருந்த சாலையை புதுசாலையாக அமைக்க முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்க வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் முதல்வரின் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து இன்று பணியினை  துவக்கி வைத்தார் இந்த சாலை சுமார் 2.5  கிலோமீட்டர் தூரம் வரையில் அமையயுள்ளதாகவும்   தகவல் தெரிவித்தார்.


மேலும் இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் திருப்பதி மற்றும் செல்வம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் தேவி வெங்கடேசன் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/