திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மனநல நல்லாதரவு மன்றம் மனம் மற்றும் நட்புடன் உங்களோடு மனநல சேவை என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவங்கி வைத்தார்.
இந்த சேவையை திருப்பத்தூர் மாவட்ட மனநல திட்டத்தின் மூலம் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சேவையை துவங்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகள் நலன் பெறவும், மன அளவில் நிறைய மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் மாரிமுத்து, மாவட்ட மனநல மருத்துவர் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் கீழே விழுந்தால் தான் எழுந்து நிற்க முடியும், சோகத்தில் தான் சந்தோசம் கிடைக்கும். பூமியில் பிறந்த அனைவரும் அழகு தான். நம்மை யாரு பாராட்டினால் கவனம் தேவை. எண்ணம் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும். புகழுக்கு நாம் மயங்குவோம்.
உண்மையான அன்பு கிடைக்கும் இடம் அம்மாவும், அப்பாவும் தான். வாழ்க்கையில் மதிப்பெண் எடுப்பது மட்டும் வாழ்க்கை இல்லை. நல்ல சிந்தனைகளை எப்படி வளர்ப்பது, நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பது. நல்லவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சியர் விழா முடிந்து சென்றபோது ஜலகாம்பாறை பகுதியை சேர்ந்த மாணவி, மற்றும் ஏழருவி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரும் தங்கள் பகுதிக்கு சாலை வசதி சரியாக இல்லை அதனால் சாலை வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். செய்து தருவதாக உறுதி அளித்தார்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment