திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த உடையமுத்தூர் ஊராட்சியில் 2 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் மின் மோட்டார் அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று மின் மோட்டார் அறையிலிருந்து மின் மோட்டார்க்கு வரும் ஒயரை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இன்று வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்ய மின்மோட்டார் அறைக்கு வந்த பம்ப் ஆப்ரேட்டர் அன்பு 500 மதிப்பிலான ஒயர் திருடு போனது குறித்து ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் வில்வநாதன் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். மேலும் இந்த மின் மோட்டார் அறையில் இருந்து இதோடு மூன்றாவது முறையாக மர்ம நபர்கள் ஒயரை திருடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment