இந்நிலையில் நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் ஏடிஎம்மில் அருகில் ஆட்டோ ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த ஆட்டோவின் சீட்டின் பக்கவாட்டில் உள்ள பேட்டியை உடைத்து அதில் இருந்து இரும்பு ராடை எடுத்து வந்து ஏடிஎம்மில் நுழைந்துள்ளார்.
இரும்பு ராடால் ஏடிஎம் உடைக்க முற்பட்டு உள்ளார். மெஷினின் கவரை மட்டுமே உடைக்க முடிந்துள்ளது. சிறிது நேரம் முயற்சி செய்த அந்த நபர் முடியாததால் ஏமாற்றம் அடைந்துள்ளார். அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் ஏடிஎம் ஐ மூடிவிட்டு சென்றுள்ளனர்.
தற்போது தான் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை சேகரிக்கப்படுகிறது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தனிநபராக அல்லது குழுவாக சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டன என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை சம்பவத்தை விசாரிப்பதற்காக மூன்று குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நகரப் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment