திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ரங்கநாதர் வலசை அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இங்கு சுமார் 222 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் அவ்வப்போது பள்ளி மாணவர்கள் காய்ச்சல் காரணமாக விடுமுறை எடுத்து வந்து உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று மட்டும் சுமார் 78 மாணவ மாணவிகள் விடுமுறை எடுத்தால் பரபரப்பை ஏற்படுத்தியது இதன் காரணமாக இந்த தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பள்ளிக்குச் சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு தொலைபேசி மூலம் அழைத்து மாணவர்களை வரவழைத்து மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் நடவடிக்கையும் ஏற்படுத்தினார், மேலும் பள்ளி மாணவ மாணவிகள் விடுமுறை எடுத்ததற்கு காரணம் சாதாரண காய்ச்சலா? அல்லது ஏதேனும் டெங்கு பாதிப்பு உள்ளதா? எனவும் பரிசோதனை செய்யப்பட்டு பின்பு அறிக்கை வெளியிடப்படும் எனவும் கூறினார்.
இந்த நிலையில் பள்ளியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி மேல்நிலை நீடித்தக்க தொட்டி சுத்தமாக உள்ளதா? எனவும் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென பள்ளி மாணவி மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment