திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட நரியனேரி ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் KT சாலை முதல் நரியனேரி சாலை வரை சுமார் 79.95 லட்சம் மதிப்பீட்டில் 2.5KM நீளத்திற்கு தார் சாலை அமைத்திட திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் கு.ராஜமாணிக்கம், கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் நேரு, கந்திலி ஒன்றிய செயலாளர்கள் கேஏ குணசேகரன் மற்றும் கே முருகேசன், மாவட்ட கவுன்சிலர் சி கே சுப்பிரமணி, ஒன்றிய குழு துணைத் தலைவர் ஜி மோகன் குமார், ஊராட்சி மன்ற தலைவர் மேகலை முருகேசன், அண்ணாசாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment