இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் திருப்பதி தலைமையில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, அம்மாவின் விருப்பப்படி அதிமுக சார்பில் கிராமங்கள் தோறும் மருத்துவ முகாமை அதிமுக பொறுப்பாளர்கள் நடத்தி வருகின்றனர். அம்மாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூற அதிமுகவினர் சென்ற போது அம்மா அவர்கள் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுவதை தவிர்த்து ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்துங்கள் என அம்மா கூறியதை நினைவு கூர்ந்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர், மேலும் இந்த மருத்துவ முகாமில் ஓசூர் சந்திரலிங்கா மருத்துவ மனை மருத்துவர்கள் கலந்து கொண்டு 1000க்கும் மேற்பட்ட இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment