திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாக முகவர்கள் (BLA-2) ஆலோசனை கூட்டம் இன்று காலை 10.00 மணியளவில் நாட்றம்பள்ளியில் உள்ள ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.ஆனந்தன், திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அசோகன், ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதிஷ்குமார், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி, திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.திருப்பதி, கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் எஸ்.ராஜா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மு.க.அருள்நிதி மற்றும் பாக முகவர்கள் (BLA-2) கலந்து கொண்டார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment