இதில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திமுக ஊழலை பற்றி பேசுகிறது, சர்க்காரியா கமிஷன் மூலம் ஊழலால் ஆட்சியை இழந்த கட்சி ஓரே கட்சி திமுக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தெரிந்து கொண்டு அனைத்து துறைகளிலும் திமுக ஊழல் செய்து வருகிறது. திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் போராட்டம், ஆசிரியர்கள் முதல் அனைத்து அரசு பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
விரைவில் காவல்துறையினரும் களத்தில் இறங்கி போராட்டம் நடத்துவார்கள் இதற்கு காரணம் திமுகவின் பொய்யான வாக்குறுதியே தமிழகத்தில் திராவிட கட்சிகள் இன்று ஆலமரம் போல் ஆட்சியில் இருப்பதற்கு காரணம் புரட்சி தலைவர் எம்.ஜி ஆர் அவர்களே காரணம். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி ஆட்சி செய்து வருகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்திற்கு ஒரு திட்டத்தை கூட நிறைவேற்ற முடியாமல் கொள்ளை அடிப்பதிலே குறியாக உள்ளனர். பொய்யான வாக்குறுதி பொய்யான ஆட்சி செய்து வரும் திமுக என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கடும் விமர்சனம் செய்தார்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment