தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களுக்கான மூன்று நாள் “கருத்தியல் பயிலரங்கம்” ஏலகிரி மலையில் நடைபெற்றது, இதில் திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் பேராசிரியர் திரு சுப. வீரபாண்டியன் முன்னிலையில் மருத்துவர் அணி மாநில துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.என்.அண்ணாதுரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, மாவட்ட துணை செயலாளர்கள் டி.கே.மோகன், ஆ.சம்பத்குமார் திருப்பத்தூர் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி, ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், மாதனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ப.ச.சுரேஷ்குமார், கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் கே.முருகேசன், கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் டி.ரகுநாத், சு.அரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல் மற்றும் மாணவர் அணி மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கட்சி முன்னோடிகள் கலந்து கொண்டார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment