இந்த சுரங்க பாதையின் வழியாக ஜீவநந்தபுரம், எலவம்பட்டி திப்பன்னன்வட்டம், மௌளகரம்பட்டி, ஆலமத்துவட்டம், செல்லரப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றனர், மேலும் குனிச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இந்த பகுதிகளில் இருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளும் பயின்று வருகின்றனர்.
இந்த சுரங்க பாதையில் பத்தடி அளவிலான தண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளி மாணவர்கள் சென்று வர மிகவும் அவதியுற்று வருகின்றனர், எனவே சுரங்க பாதையின் மீது உள்ள ரயில்வே தண்டவாளத்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் தினம் தோறும் கடந்து வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் ரயில்வே அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர்.
எனவே உயிர் சேதம் எதுவும் நடைபெறும் முன்னர் பள்ளி மாணவர்களின் நலன் கருதி இந்த சுரங்க பாதையில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர், இந்த சுரங்க பாதையின் மீது பம்பு அறை இருந்தும் இதனை முறையாக ரயில்வே துறை ஊழியர்கள் தண்ணீரை அப்புறப்படுத்த மறுக்கின்றனர்
மேலும் அதற்கான சம்பளத்தை வாங்கிக் கொண்டும் மெத்தன போக்காக செயல்படுகின்றனர் என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment