கேத்தாண்டப்பட்டியில் கிராம சபைக் கூட்டத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி பங்கேற்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 November 2023

கேத்தாண்டப்பட்டியில் கிராம சபைக் கூட்டத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி பங்கேற்பு.


திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியம், கேத்தாண்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து பேசி, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.

அதனைதொடர்ந்து அப்பள்ளியில் சத்துணவு கூடத்திற்கு சென்று பள்ளி மாணவ மாணவர்களுக்கான செய்யப்பட்ட மதிய உணவு உண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலு‌ம் அப்பள்ளிக்கு ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டு- ஐ ஆய்வு செய்தார். 


இந்நிகழ்ச்சியில் நாட்றம்பள்ளி வட்டாச்சியர் குமார், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, ஒன்றிய கவுன்சிலர் எழிலரசிகுமார், ஊராட்சிமன்ற தலைவர் திருப்பதி, ஒன்றிய அவைத் தலைவர் கோபிநாதன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னோடிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.


- செய்தியாளர் கோபிநாத்.  

No comments:

Post a Comment

Post Top Ad

*/