செஸ் அகடாமி சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது.இதில் 8 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 70 பேர் கலந்து கொண்டனர்.அதில் திருப்பத்துார் தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்த பொன்முடி கீதா முருகன் மகள் யாஷினி (தனியார் பள்ளி மாணவி) என்பவர் கலந்து கொண்டார். இப்போட்டி மொத்தம் ஐந்து சுற்றுகள் நடத்தப்பட்டது.
அதில் ஐந்து சுற்றுகளிலும் யாஷினி வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றார். இதனையடுத்து கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் யாஷினி வாழ்த்து பெற்றார்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment