இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 13 வயதுக்குட்பட்டவர்கள் , 15 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்ற மூன்று பிரிவின் கீழ் மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான மிதிவண்டி போட்டிகள் தனித்தனியே நடைபெற்றது. மாணவிகளுக்கு முறையே 10 கிலோமீட்டர் 15 கிலோ மீட்டர் மற்றும் 15 கிலோமீட்டர் மாணவர்களுக்கு முறையே 15 கிலோமீட்டர் 20 கிலோ மீட்டர் மற்றும் 20 கிலோமீட்டர் தொலைவிற்கு மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
மிதிவண்டி போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். போட்டிகளில் முதல் பரிசாக ரூபாய் 5000 , இரண்டாம் பரிசாக ரூபாய் 3000, மூன்றாம் பரிசாக ரூபாய் 2000 , 4 முதல் 10ஆம் இடம் வரை பெறுபவர்களுக்கு ரூபாய் 250 பரிசுத்தொகை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மிதிவண்டி போட்டிகளில் பங்கு பெற்றனர் .
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் , ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி , விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் வெங்கடேஷ். விளையாட்டு துறை அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் என பலர் பங்கு பெற்றனர்.
- செய்தியாளர் கோபிநாத்.

No comments:
Post a Comment