திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னாரம்பட்டி ஊராட்சி காரகாரன் வட்டம் பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் JJM சேமிப்பு நிதி 2020-21 சுமார் 7.66 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 10000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். சின்னாரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆசிரியர் திருM.சண்முகம் அவர்கள் அனைவரையும் வரவேற்று சிறப்பு செய்தார்.
இந்நிகழ்வில் கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் திரு KA.குணசேகரன் BABL மற்றும் கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், துனண சேர்மன் மோகன்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரு, வினாயகம்,ஒன்றிய கவுன்சிலர் தாமோதரன், துணை தலைவர் திருமதி தேவிகா முருகன், பொறியாளர் செல்வி, மத்திய ஒன்றிய துணை செயலாளர் தீபா, ஊராட்சி தலைவர்கள் நித்தியானந்தம், லட்சுமிகார்த்திகேயன், சின்னாரம்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் ஊர்பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment