மனதின் குரல்' வாயிலாக நாட்டு மக்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக். 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நாடு தழுவிய தூய்மை இயக்கம் நடத்தப்பட உள்ளது. அதற்கு நேரம் ஒதுக்கி, தூய்மை இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டு எனவும் அதே போல பிரதமர் மோடி நேற்று முன்தினம் `எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “அக். 1-ம் தேதி காலை 10 மணிக்கு மக்கள் அனைவரும் அவரவர் பகுதியில்ஒன்றுகூட வேண்டும். தூய்மையான எதிர்காலத்தை உருவாக்கும் உன்னத முயற்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்" என்றும் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆதிபெரமனூர் 14வது வார்டு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் வார்டு கவுன்சிலருமான குருசேவ் தலைமையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அந்த பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளி மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் அசுத்தமான உள்ள பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொண்டனர். இதில் ஒன்றிய பொது செயலாளர்கள் திருப்பதி, நகர பொறுப்பாளர் பழனி ஒன்றிய துணை தலைவர் செந்தில் ராஜா, ஒன்றிய பொருளாளர் ஞானசேகரன், உட்பட 50க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
- செய்தியாளர் கோபிநாத்.
No comments:
Post a Comment