திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி கந்திலி ஒன்றியம் நார்சாம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி காஞ்சனா சீனிவாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்த ஊராட்சிக்கு தேவையான பல்வேறு பொருளில் பணிகள் குறித்த விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், வேளாண்மை துறை உதவி துணை இயக்குனர் ராகினி, மாவட்ட கவுன்சிலர் சி கே சுப்பிரமணி,ஒன்றிய குழு துணை தலைவர் ஜி மோகன் குமார்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விநாயகம், நேரு,மின்சார துறை உதவி பொறியாளர் பிரேம், வட்டார வளர்ச்சி கல்வி அலுவலர் தென்னவன்,கூட்டுறவு சார்பதிவாளர் தர்மேந்திரன் மற்றும் செல்வமணி ஆனந்தன் கழகத் தோழர்கள் கிளைக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment