திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 October 2023

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.


திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவங்கி வைத்தார். இந்த பேரணியில் மழைநீரை எப்படி சேமிக்கவேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. 

ஒவ்வொருவரும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும். அப்போது தான் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.  நீர் மட்டம் உயர்ந்தால் விவசாயம் மற்றும் குடிநீர் தட்டு பாடு தராது. அதேபோல் குடிநீரை சேமித்து வைக்க வேண்டும். நீரை வீணாக்ககூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/