ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மண்டலவாடி ஊராட்சி, கவுண்டப்பனூர் பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி, மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் தாமோதிரன், ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நந்தகுமார், சாமமண்ணன், ரவி, ராஜா, கோவிந்தசாமி, ரவி, ஜெயகிருஷ்ணன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
- செய்தியாளர் கோபிநாத்

No comments:
Post a Comment