திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த உடையமுத்தூர் ஊராட்சி ரகுபதியூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது இதில் திருப்பத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி அமைந்துள்ள இடத்தின் முன்பு திருப்பத்தூர் வழியாக திருவண்ணாமலை செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது.
இந்த நிலையில் ஒரு நாளைக்கு சுமார் 10,000 மேற்பட்டோர் அந்த வழியாக பயணித்து வருகின்றனர் அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் காலை மற்றும் மாலை நேரத்தில் வெளியே வரும் பொழுது அதிவேகமாக வரும் வாகனங்கள் மோதி பள்ளி மாணவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
எனவே பள்ளியின் முன்பு வேகத்தடை அமைத்து தரக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் வில்வநாதன் பலமுறை மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி நெடுஞ்சாலை துறைக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே பள்ளி மாணவர்கள் நலன் கருதி உடனடியாக வேகத்தடை மேடு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment