திருப்பத்தூரில் திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி- நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு- பிஜேபி யும், மோடியும் பொய்யை பரப்புவார்கள் - தயாநிதி மாறன் எம்.பி பேச்சு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 30 October 2023

திருப்பத்தூரில் திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி- நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு- பிஜேபி யும், மோடியும் பொய்யை பரப்புவார்கள் - தயாநிதி மாறன் எம்.பி பேச்சு.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  திருப்பத்தூர் மாவட்ட திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி  இன்று  நிறைவு பெற்றது. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழா நிறைவு பெற்றது.
 

இதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதிமாறன் பங்கேற்றார்.    திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை,  ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி,  ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன்,  மாவட்ட ஆவின் தலைவர் எஸ் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டது. 


தயாநிதிமாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பாக விளையாட்டு போட்டி நடைப்பெற்றது. முன்பெல்லாம் மாதத்திற்கு ஒரு முறை தான் விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது. இப்போது வாரத்திற்கு ஒரு நடத்தப்படுகிறது. 


எங்கள் கழகத்தின் சார்பில்  விளையாட்டு  மேம்பாட்டு துறையின் சார்பில் சிறப்பாக பல்வேறு போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானம்  ஏற்பாடு செய்யப்படும். நாடாளுமன்ற தேர்தல் வருவதால் பா.ஜா.க வினர்களும், மோடியும் பொய்யை பரப்புவார்கள், அதனால் அனைவரும் கூகுளில் தேடி பாருங்கள்  உண்மை தெரியும் என்றார். 


திருப்பத்தூர் மாவட்டத்தின்  சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 120க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதல் பரிசு 1 லட்சத்து 100 ஆம்பூர் அணியும்,  இரண்டாம் பரிசு 50 ஆயிரத்து 100 திருப்பத்தூர் அணியும்வென்றது. , மூன்றாம் பரிசு 25 ஆயிரத்து 100, நான்காம் பரிசு 15 ஆயிரத்து நூறு மற்றும் பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசு 3 என மொத்தம் 11 பரிசுகள் வழங்கப்பட்டது.


- செய்தியாளர் கோபிநாத் 

No comments:

Post a Comment

Post Top Ad

*/