திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதியில் திமுக மாணவரணி மாநில செயலாளரும், காஞ்சிபுரம் எம்எல்ஏவுமான எழிலரசன் தலைமையில் நடைப்பெற்றுக்கொண்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனைப்படியும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் கருத்தியியல் பயிலரங்கம் என்ற தலைப்பில் திமுக மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான பயிலரங்க கூட்டம் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இதில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் பேசியதாக இந்த பயிலகத்தில் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். உங்களை போல் மாணவனாக இருந்து வந்தவன் நான். இன்று இருப்பது போல் அன்று வசதிகள் கிடையாது. திமுக வே மாணவர்களால் உருவாக்கப்பட்டது தான். மாணவரணி தான் திமுக வுக்கு பக்க பலமாக இருந்தது. இயக்கத்தில் இருப்பார்கள் ஆனால் சிலர் மட்டுமே கட்சிக்கு வருவார்கள்.
இயக்கத்தை பற்றியும், தலைவர்களையும் பற்றி முழுவதும் யார் தெரிந்துக்கொள்வார்களோ அவர்களுக்கு தான் கட்சிக்கு வருவார்கள். இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சிவகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் தான் கட்சியின் கொள்கைகளை பற்றி தெரிந்துக்கொள்ள முடியும். இந்த பயிற்சி வகுப்பை நடத்துகிற மாநில மாணவரணி தலைவர் எழிலரசனுக்கு பாராட்டுக்கள்.
திருவண்ணாமலையில் முதன் முதலில் இந்தி எதிர்ப்பு மாநாட்டை துவக்கியவர் சி.என்.அண்ணாதுரை. அவர் வம்சத்தில் வந்தவர் எழிலரசன் என்றார். நாம் வரலாற்றை தெரிந்தால் மட்டுமே வாழ்க்கை நடத்த முடியும். மோடியை பற்றியும், இறந்த லேடியை பற்றியும் பேசுவதற்கு முன்பு அவர்களை பற்றி படியுங்கள் என்றார். நம்முடைய இனம் கெட்டுபோக காரணம் நம்முடைய வரலாற்றை மறந்ததுதான்.
பெரியார் இல்லை என்றால் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து இருக்க முடியாது. அவரால் தான் இன்று எல்லோரும் படிக்க முடிகிறது. தலைவர்களை புகழ்வது தவறல்ல. முதலில் படியுங்கள். நான் இன்றும் பெரியாரின் புத்தகங்களை படித்து வருகிறேன். அணிகள் வருவது பெரிதல்ல கொள்ளைகளை புரிந்துக் கொள்ளவேண்டும். எதை பற்றி பேசினாலும் அதை பற்றி புரிந்துக் கொள்பவர்கள் மாணவர்கள்தான். உங்களை நம்பி இந்த இயக்கம் உள்ளது. அதற்காக முதலில் கொள்கைகளை தெரிந்துக் கொள்ளுங்கள். விவாதம் செய்யுங்கள். விவாதம் செய்து கொள்ளைகளை புரிய வைத்து நம் இயக்கத்தில் சேர்த்துங்கள் என்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டி கலந்துக்கொண்டு பயிற்றுவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், மற்றும் அனைத்து பிரிவு பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் ஏற்பாடு செய்திருந்தார்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment