தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அலுவலகத்தை பூட்டிவிட்டு தொடர் விடுப்பில் செல்லுதல் எனப் போராட்டம்! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 October 2023

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அலுவலகத்தை பூட்டிவிட்டு தொடர் விடுப்பில் செல்லுதல் எனப் போராட்டம்!


திருப்பத்தூரில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக பெயரளவுக்கு கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை பூட்டிவிட்டு தொடர் விடுப்பில் செல்லுதல் எனப் போராட்டம்! மற்றொரு பக்கம் அலுவலகம் திறப்பு!

தமிழகம் முழுவதும் சுமார் 4350 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சுமார் 150 நகர கூட்டுறவு கடன் சங்க மூலம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் MSC / AIF திட்டத்தை அனைத்து சங்கங்களும் அமல்படுத்த வேண்டும் என மண்டல இணைப்பதிவாளர்கள் கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளித்து வருகின்றனர்  


இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணை  பதிவாளர்  முருகேசன் அவர்களிடம் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் தலைவர் ஆனந்தன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  மனு அளித்தனர்.


அந்த மனுவில் தமிழக முழுவதும் உள்ள பெரும்பாலான கூட்டுறவு கடன் சங்கங்கள் போதிய பணியாளர்கள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு செயலாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களை கூடுதல் பொறுப்பில் கவனித்துக் கொண்டு வருகின்றனர், அதேபோன்று ஒரு நியாய விலை கடை விற்பனையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட நியாய விலை கடைகளை கூடுதல் பொறுப்பில் கவனித்து வருகின்றனர்.


மேலும் கூட்டுறவு கடன் சங்கங்கள் முற்றிலும் கணினி மயமாக்கப்பட வேண்டும் என நெருக்கடிகள் இருந்து வருகின்றன இதனால் பணியாளர்கள் சங்க பணிகள் முழுவதையும் நிறைவேற்ற இயலாமல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.


மேலும் தற்போது பல்நோக்கு சேவை மையம் விவசாய உட் கட்டமைப்பு MAC/AIF திட்டத்தின் கீழ் சங்கங்கள் விவசாய உபகரணங்களான டிராக்டர் நெற்கதிர் அறுக்கும் இயந்திரம் கரும்பு வெட்டும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை பல லட்சங்கள் மதிப்பீட்டில் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்பட வேண்டும் எனவும் 


இந்த திட்டத்தின் கீழ் ஏதாவது ஒரு பணியினை மேற்கொள்ள வேண்டும் கூட்டுறவுத் துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது ஆனால் இதற்குரிய அரசாணையோ அல்லது பதிவாளர் சுற்றறிக்கையும் தெளிவாக வழங்கப்படவில்லை என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது. மேலும் MCA! AIF திட்டத்தை அனைத்து சங்கங்களும் அமுல்படுத்த வேண்டும் என மண்டல இணைப்பதிவாளர்கள் கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவே இன்று சங்கங்களில் உள்ள அனைத்து கருவிகளையும் ஒப்படைத்துவிட்டு அலுவலகப் பணியாளர்கள் தொடர் விடுப்பில் செல்வதாக என அறிவிப்பு நடத்தி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெயரளவுக்கு மட்டுமே திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆனால் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பகுதியில் உள்ள C.2396 திருப்பத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் திறக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெயரளவுக்கு போராட்டம் என அறிவித்துவிட்டு மற்றோரு பக்கமே கூட்டுறவு கடன் சங்கம் திறந்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/