இதற்கு அந்த மூதாட்டி நீங்கள் ஏற்கனவே 15 நாள் கழித்து வர சொன்னால்தான் நான் வந்தேன் என்றும் கை கால் வலி அதிகமாக உள்ளதால் எனக்கு ஊசி ஏதாவது போடுமாறு கேட்டுள்ளார் இதற்கு அந்த மருத்துவர் இப்பொழுதெல்லாம் போட முடியாது நீ வெளியே போ என்று ஒருமையில் பேசியுள்ளார் இதனால் பெரும் மனஉளைச்சல் தாங்காமல் அழுது கொண்டு வெளியே சென்றுள்ளார், இது மட்டுமில்லாமல் இங்கு இங்கு இரவில் பிரசவம் பார்க்கப்படும் பெண்களுக்கு செவிலியர்கள் ரூபாய் 2000 விதம் பிக்சட் முறையில் வசூலிப்பதாகவும் குறிப்பாக செவிலியர் சிந்து என்பவர் மற்றும் துப்புரவு பணியாளர் கவிதா என்பவரும் இதை நடைமுறையில் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
அது மட்டுமில்லாமல் பிரசவ அறை கழிப்பறை சுத்தம் செய்ய தேவைப்படும் உபகரணங்கள் நோயாளிகள் பயன்படுத்தும் துணி துவைக்க தேவைப்படும் சோப்பு கட்டி சோப்பு பவுடர் ஆகிய அனைத்தையும் அனைத்தையும் நோயாளியின் உறவினர்களை வாங்கித் தருமாறு வற்புறுத்துகின்றனர். இதைக் கண்டு கொள்ளாத இருக்கும் குனிச்சி திட்ட இயக்குனர் டாக்டர் தீபா இதைப் பற்றி பலமுறை இவரிடம் கூறியும் இவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment