ஏலகிரி மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் இலவச சிறப்பு மருத்துவ முகாம்! எம்எல்ஏ பங்கேற்பு! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 October 2023

ஏலகிரி மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் இலவச சிறப்பு மருத்துவ முகாம்! எம்எல்ஏ பங்கேற்பு!


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் பொதுமக்களுக்கு கண்,பல்,காது, மூக்கு, தொண்டை, வயிறு, தோல் சம்மந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்), காசநோய், இருதய நோய், மகளிர் மருத்துவம், கருப்பை வாய் புற்றுநோய், பால்வினை நோய், குழந்தைகள் நோய், எலும்பு மூட்டு நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது மேலும் இதற்கான பரிசோதனைகளையும் செய்யப்பட்டது.


இந்த சிறப்பு முகாமில் திமுக மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, மற்றும் சிந்துஜா ஜெகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் ஏலகிரிமலை ஊராட்சிமன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் ஊர்  மக்கள் என்ன பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/