மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான்,IPS., அவர்களின் தலைமையில் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 October 2023

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான்,IPS., அவர்களின் தலைமையில் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோரிப்பள்ளம் கிராமத்தில் இன்று 07.10.2023 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான்,IPS.,  அவர்களின் தலைமையில் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம் மற்றும் மதுவிலக்கு சோதனை நடைபெற்றது.   

விழிப்புணர்வு நிகழ்வில்  உரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், கிராமத்திற்கு வரும் அந்நிய நபர்கள் பற்றியும் கிராமத்தில் நடைபெறும் குற்றச் செயல்கள் குறித்தும் காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும். சாராயம் விற்றல்,  காய்ச்சுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார், இக்கூட்டத்தில் வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.விஜய்குமார், காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் 250 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


- செய்தியாளர் கோபிநாத். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/