திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 30 October 2023

திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.


திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பால் விலையை உயர்த்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு அறிவித்த ஊக்கத்தொகை இதுநாள் வரை வழங்கப்படாமல் இருப்பதை கண்டித்தும், தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் பழனி முருகன் மற்றும் மாநில பொருளாளர் ராஜேஷ் வேலூர் மண்டல மாநில செயலாளர் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் பால் உற்பத்தி செய்ய அடர் தீவனம் வெளிச்சந்தையில் விலை பன்மடங்கு உயர்ந்தது கால்நடைகளை பராமரிக்க பால் உற்பத்தி செய்ய வேலையாட்களின் கூலி பல மடங்கு உயர்ந்துள்ளது.  பெட்ரோல் டீசல் விலை உயர்வின் காரணமாக கால்நடைகளுக்கு தேவையான மூலப்பொருள் ஏற்றி வரும் வாகனம் வாடகையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.


ஆவின் நிர்வாகம் மூலம் தற்போது வழங்கப்படும் பாலின் விலை உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலை தற்போது கட்டுப்படியான விலை இல்லை ஆகவே பால் உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது. பசும்பால் மற்றும் எருமைப்பால் விலை தற்போது வழங்கப்படும் நிலையில் இருந்து இரண்டிற்கும் ஒரு லிட்டருக்கு ரூபாய் 10 விலை உடனடியாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.


தமிழ்நாடு அரசு பால்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் நிர்வாகத்திற்கும் பால் கொள்முதல் செய்யும் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கும் உடனடியாக கட்டுபடியான பால் விலை உயர்த்தி தமிழக அரசு இனியும் அறிவிக்காவிட்டால் தமிழக அரசு பால்வளத் துறை மூலம் எங்கு வரும் ஆவின் நிர்வாகத்திற்கு பால் உற்பத்தி செய்யும் பால் உற்பத்தியை நிறுத்தி -கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளை ஒன்று திரட்டி சாலை மறியல் போராட்டம் உழவர் பெரும் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைமையில் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

 

- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை 

No comments:

Post a Comment

Post Top Ad

*/