திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து ஆதியூர் பொதிகை கல்லூரி வரை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைப்பெற்றது. இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இந்த போட்டியானது மக்களிடையே தகவல் அறியும் உரிமை சட்டத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் பானு, வட்டாட்சியர் சிவப்பிரகாசம், காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர் என திரளாக பங்கேற்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment