எம்எல்ஏக்கள் தேவராஜி (ஜோலார்பேட்டை), நல்லதம்பி (திருப்பத்துார்) முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சேது ராஜன் வரவேற்றார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து மாரத்தால் ஓட்டத்தை துவக்கி வைத்தார். இதில், 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவுக்கு 8 கி.மீ., பெண்கள் பிரிவுக்கு 5 கி.மீ.,துாரத்துக்கும்,25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவுக்கு 10 கி.மீ., பெண்கள் பிரிவுக்கு 5 கி.மீ.,துாரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் நுாற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு ஓடினர்.
மேலும் முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி,நகர திமுக செயலாளர் அன்பழகன், நகராட்சி சேர்மன் காவியா, துணை சேர்மன் இந்திரா, உடற்கல்வி ஆய்வாளர் குணசுந்தரி,சிறு விளையாட்டு அரங்க பொறுப்பாளர் அன்பரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் கோபிநாத்.

No comments:
Post a Comment