திருப்பத்தூர் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்‌ நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 October 2023

திருப்பத்தூர் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்‌ நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


திருப்பத்துார் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து திருப்பத்தூரில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடத்தும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நேர்காணலில் பங்கு பெற்றனர், நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் வழங்கினார்.


வேலை வாய்ப்பு முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட  தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெற்றன. நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/