விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 2020 மற்றும் 2023 ஆகிய இரண்டு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், ஒன்றிய அரசு தொடக்க வேளாண்மை சங்கங்கள் மற்றும் கூட்டுறவு நிதி நிறுவனங்கள் அனைத்தையும் வங்கி ஒழுங்குபடுத்தும் சட்டம் 2020 பகுதி 12(1) அனைத்தும் மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 2023 பகுதி 26(63) ஆகிய இரண்டு சட்டங்கள் மூலம் விவசாயிகளின் நேரடி உரிமையை பறிக்கும் சட்டமாகும்.
மேலும் மாநில அரசு, மாவட்ட, கிராம அளவில் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் அனைத்தையும் சீர்குலைக்கும் சட்டமாகும். ஆகவே ஒன்றிய அரசு மேற்கண்ட இரு சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும், தென்பெண்ணை ஆற்றுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசே, நதிநீர் தீர்ப்பாயம் அமைத்திடு ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் டெல்லியில் நடைபெற்ற போராட்ட குழுவின் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு சாமி கண்ணு மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கம் நந்தி நகர செயலாளர் முருகன் மற்றும் கட்சி தோழர்கள் முப்பதுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment