"மகப்பேறு விழிப்புணர்வு" மருத்துவமணையில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆற்றிய உரை ஓர் சிறந்த சமுதாயம் மிக ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகள்.
மகப்பேறு மரணம் தடுத்தல், இளம் வயது திருமணம் மற்றும் இளம் வயது கர்ப்பம் தடுத்தல், சரி விகித பாலினம் உண்டாக்குதல், கர்ப்பிணி தாய்மார்கள் ஆறாம் மாதம் எட்டாம் மாதம் வரையிலான கரு கலைப்பு தடுத்தல், இரு குழந்தைகளுக்கு பிறகு நிரந்தர குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தல், "ஓர் சிறந்த சமுதாயம் மிக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உரையாற்றினார்."
மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மருத்துவமனை பணியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவமனையில் உள்ள குடிநீர் சுத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
- கழிவறைகள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்
- மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்ற உணவை உண்டு தரமாகவும் சுவையாகவும் உள்ளதா என ஆய்வு செய்தார் உணவு எப்போதும் தரமானதாகவும் சுவையானதாகவும் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்
- BMWM - BIO MEDICAL WEST MANAGEMENT பயோ மெடிக்கல் கழிவுகளை உரிய முறையில் தரம் பிரித்து கழிவுகளை அகற்ற உத்தரவிட்டார்
- முகாம் அலுவலகத்தில் சரிவர சுத்தம் செய்யப்படாதவை கண்டு உடன் சுத்தம் செய்ய உத்தரவிட்டார்
சிகிச்சைக்கு வரும் பொதுமக்களிடம் அன்போடும் கனிவோடும் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மருத்துவமனைக்கு வரும் பொது மக்களிடமும், நோயாளிகளிடமும் ஒரு ரூபாய் கூட கையூட்டு பெறக் கூடாது என வலியுறுத்தினார் கையூட்டு குறித்து புகார்கள் ஏதேனும் வரப்பெற்றால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார் உரிய தரமான சிகிச்சை அளிக்க அறிவுரைகளை வழங்கினார். நோயாளிகளிடமும் மருத்துவமனை ஊழியர்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.

No comments:
Post a Comment