திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பங்கு பெற்று விளையாட்டு போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் செவித்திறன் பாதிக்கப்பட்டோர் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர் கை கால்களை இழந்தவர்கள் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் பங்கு பெற்றனர்.
சுமார் 150 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கு பெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசுகள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3 அன்று வழங்கப்பட உள்ளது.
செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எரிதல், தொடர் ஓட்டப்பந்தயம் மற்றும் முற்றிலும் அல்லது குறைவாக பார்வை திறன் பாதிக்கப்பட்டுருக்கான நின்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் மற்றும் கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான காலிபர் நடை போட்டி , மூன்று சக்கர வண்டி ஓட்டப்போட்டி, சக்கர நாற்காலி ஓட்ட போட்டி மற்றும் கைகள் பாதிக்கப்பட்டுருக்கான ஓட்டப்பந்தயம் மற்றும் அறிவு சார்ந்த குறை உடையோருக்கான நின்று நீளம் தாண்டுதல், ஓடி நீளம் தாண்டுதல் ஓட்டப்பந்தயம் மற்றும் ஸ்பாஸ்டிக் குழந்தைகளுக்கான உருளைக்கிழங்கு சேகரித்தல், கிரிக்கெட் பந்து எறிதல், தடை தாண்டி ஓடுதல் மற்றும் அனைத்து வயதினர் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் பொதுவான ஓட்டப்பந்தயம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பலர் பங்கு பெற்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment