திருப்பத்தூர் வீட்டுவசதி வாரியம் பகுதியில் திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் நீட் விலக்கு நம் இலக்கு என கோரி குடியரசு தலைவருக்கு தபால் அனுப்பும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 20 November 2023

திருப்பத்தூர் வீட்டுவசதி வாரியம் பகுதியில் திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் நீட் விலக்கு நம் இலக்கு என கோரி குடியரசு தலைவருக்கு தபால் அனுப்பும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.


திருப்பத்தூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நீட் விலக்கு கோரி குடியரசு தலைவருக்கு தபால் அனுப்பும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ராஜேந்திரன்   தலைமை தாங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், மாவட்ட துணை அமைப்பாளர் தமிழ்மணி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட வர்த்தக அணி  துணை அமைப்பாளர் தாமோதரன் , மற்றும் நகர இளைஞரணி அமைப்பாளர் டி எஸ் மாதேஸ்வரன். சார்லஸ் நவீன் குமார். நதீம் . சிவ. பெருமாள். அதற்கான கால் பாதிக்கப்பட்டு நகர மன்ற உறுப்பினர் சுகுணா ரமேஷ். திரு. கோபிநாத். பிற அணி நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.


திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரம் நீட் விலக்கு தபால் அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்கவும், மாநில இளைஞரணி அமைப்பாளரும், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு நீட் விலக்கு நம் இலக்கு என்ற ஒன்றை கோரிக்கை வைத்து தொடர்ந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசு தலைவருக்கு தபால் அனுப்பும் நிகழ்ச்சி தொடர்ந்து  நடைப்பெற்று வருகிறது.  அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பத்தூர் வீட்டுவசதி வாரியம் மற்றும் சின்னகடை தெரு ஆகிம பகுதியில் நடைப்பெற்றது.


- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/