திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பகுதியில் உள்ள அச்சமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 92 பள்ளி மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர், இந்த நிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார், மேலும் இந்த நிகழ்வில் திருப்பத்தூர் வட்டார கல்வி அலுவலர் கமலநாதன் அச்சமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி, ஆசிரியர்கள், மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் பலர் இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment