ஏகே மோட்டூர் பகுதியில் உள்ள 16 பழங்குடியினர் மக்களுக்கு வீடு கட்டும் பணிக்கான பணி ஆணையை மாவட்ட ஆட்சியர் தலைமையில் எம்.எல்.ஏ வழங்கினார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 16 November 2023

ஏகே மோட்டூர் பகுதியில் உள்ள 16 பழங்குடியினர் மக்களுக்கு வீடு கட்டும் பணிக்கான பணி ஆணையை மாவட்ட ஆட்சியர் தலைமையில் எம்.எல்.ஏ வழங்கினார்.


தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை 2022 மற்றும் 2023 ஆண்டிற்கான விரிவான பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம்  அழிவின் விளிம்பில் உள்ள வீடற்ற பழங்குடி இன மக்களுக்கு இலவச வீடுகள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கும் நிகழ்ச்சி.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏகே மோட்டூர் ஊராட்சியில் ஒரு வீட்டிற்கான தொகை 4 லட்சத்து 62 ஆயிரம் என  16 பழங்குடி இன மக்களுக்கு 73 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் வீடு கட்டும் பணி அணையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் ஏகே மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலு மற்றும் மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராசு வட்டாட்சியர் அலுவலர் சங்கர் மற்றும் கருணாநிதிஅரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad