திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அசோகன் மகன் அண்ணாமலை இவர் தொடர்ந்து வெளி மாநில மது பாக்கெட்டுகளை கள்ளத்தனமாக விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் திருப்பத்தூர் கிராமிய போலீசார் மாடப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாமலை வீட்டின் சோதனை செய்தனர் அப்போது வீட்டில் அருகே மறைத்து வைத்திருந்த பத்து பாக்ஸ் அளவிலான வெளிமாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர் மேலும் மொத்த மதிப்பு ஒரு லட்ச ரூபாய் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் போலீசார் வருவதை அறிந்து கண்டு அண்ணாமலை அங்கிருந்து தப்பி சென்றுள்ளார் மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment