ஆவல்நாயக்கன்பட்டியில் 39 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட தார் சாலை தரமற்று உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 November 2023

ஆவல்நாயக்கன்பட்டியில் 39 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட தார் சாலை தரமற்று உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!


ஆவல்நாயக்கன்பட்டியில் 39 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட தார் சாலை தரமற்று உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு! ஒரு மணி நேரம்  ஒதுக்குங்கள் அனைத்து தார் ரோடையும் கையால் பெயர்த்து தருகிறேன் என ஆதங்கம்.


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆவல்நாயக்கன்பட்டியில் முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 39 லட்சம் மதிப்பீட்டில் ஒரு கிலோ மீட்டர் அளவிலான தார் சாலை போடப்பட்டுள்ளது, இந்த தார் சாலை 25 இன்ச் அளவில் போடப்பட வேண்டும் ஆனால் இந்த தார்ச்சாலை 10 இன்ச்க்கும் குறைவாக இந்த தார் சாலை போடப்பட்டுள்ளது மேலும் இந்த தார்ச்சலையை இன்று பொதுமக்கள்  தங்களுடைய கைகளாலேயே தார் சாலையை பெயர்த்து எடுக்கும் அளவிற்கு தரமற்ற உள்ளதாக குற்றம் சாட்டினர்.

மேலும் இந்த தார் சாலையை கைகளால் பெயர்த்து எடுத்தும் வீசி எறிந்தனர். மேலும் அப்போது திமுகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது அவரிடமும் பொதுமக்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினர், மேலும் ஒரு மணி நேரம் தங்களுக்கு தாருங்கள் ஒரு கிலோ மீட்டர் அளவில் போடப்பட்ட  தார் சாலையை கைகளையே நோண்டி எடுத்து விடுகிறோம் எனவும் ஆதங்கமாக பேசினர்.


அப்போது தார் சாலையை பொதுமக்கள் பேர்க்கும் போது மாவட்ட கவுன்சிலர் தனது கால்களால் பொதுமக்களின் கைகளை தார் சாலைகளை வைத்து மிதித்த சம்பவமும் நடந்தேறியது இதன் காரணமாக பகுதியில் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது, மேலும் தரம் இல்லாதா சாலையை போட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/