ஏலகிரி மலையில் கூலி தொழிலாளி கல்லால் தாக்கி கொலை கள்ள காதல் தகராறு என? பல்வேறு கோணங்களில் ஏலகிரி மலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 November 2023

ஏலகிரி மலையில் கூலி தொழிலாளி கல்லால் தாக்கி கொலை கள்ள காதல் தகராறு என? பல்வேறு கோணங்களில் ஏலகிரி மலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை அருகே புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 38) இவர் கூலி வேலை செய்து வருகிறார், இவருக்கு திருமணமாகி காளீஸ்வரி என்கின்ற மனைவியும் இரண்டு பிள்ளைகள் உள்ளன.


இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் கோவிந்தராஜி வீட்டு விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை இந்நிலையில் இன்று காலை கோபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மர்மமான முறையில் கல்லல் தாக்கி இறந்து கிடந்தார், இது குறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரி மலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.


மேலும் இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மற்றும் திருப்பத்தூர் டிஎஸ்பி செந்தில்குமார் ஆகியோர் சம்பவம் இடத்திற்கு விரைந்து  சென்று கொலை குறித்து காரணம் மற்றும் கொலையாளி குறித்து விசாரணை செய்து வருகின்றனர்


கள்ள காதல் தகராறில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாரா? அல்லது சொத்து தகராறு என? பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர், இது குறித்து ஏலகிரி மலை போலிசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/